தமிழ்நாடு காரைக்குடி (Karaikudi) வழியாக இலங்கைக்கு (Sri Lanka) கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சா காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த கஞ்சா ஆந்திர (Andhra) மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து காரைக்குடிக்கு கடத்தி வரப்பட்டதாகவும் காரைக்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில், காரைக்குடி காவல் உதவி ஆய்வாளர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஓரிடத்தில் கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டு இருந்த நிலையில் அதன் அருகே நின்றிருந்த மூன்று பேர் காவல்துறையினரைக் கண்டதும் காரில் ஓட்டம்பிடித்துள்ளனர்.
சோதனைச் சாவடி
எனினும் சமயபுரம் அருகே உள்ள காவல் சோதனைச் சாவடியில் அந்தக் கார் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விசாரணையின் போது தங்களிடம் ஒப்படைக்கப்படும் கஞ்சாவை உரிய இடத்தில் சேர்த்தால் ரூபாய் முப்பதாயிரம் கிடைக்கும் என்றும் அதற்காக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகவும் கைதானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post