இந்தியாவின்(india) பிரபல பொலிவுட் நடிகர் சல்மான்கானை(salman khan) கொலை செய்த பின்னர் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற குழு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி மும்பை – பண்ட்ராவில் உள்ள சல்மான்கானின் பண்ணை வீட்டுக்கு வெளியில் அடையாளம் தெரியாத குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது.மும்பை காவல்துறைஇதனையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட மும்பை காவல்துறையினர் ஐவரை கைது செய்தனர்.அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் மும்பை சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா லோரன்ஸ் பிஷ்னோய் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில்தான் மும்பை காவல்துறையினர் பல அதிர்ச்சித் தகவல்களுடன் 350 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் சல்மான்கானை படப்பிடிப்பின் போது சுட்டுக் கொல்வதற்கு அந்தக் குழு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இலங்கைக்குதப்பிச் செல்ல திட்டம்இதற்காகக் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் அவர்கள் திட்டமிட்டு வந்திருப்பதாகவும், இதற்காக அதிநவீன ஆயுதங்களைப் பாகிஸ்தான் மற்றும் துருக்கியிலிருந்து கொள்வனவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சல்மான்கானை படுகொலை செய்துவிட்டு மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி ஓடி வந்து பின்னர் இலங்கைக்கு கடல்வழியே சென்று தலைமறைவாகவும் திட்டம் தீட்டப்பட்டிருந்ததது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post