இடைக்கால சர்வகட்சி அரசொன்றை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோருடன் தாமும் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இது தொடர்பாக கலந்துரையாடியதாக விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் வகையில் இடைக்கால அரசின் கீழ் எதிர்காலத்தில் நாட்டை ஆள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து அரச பொறுப்புகளையும் இராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post