Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இடமாற்றங்களை முறையாக மேற்கொள்ளாவிடில் முற்றுகை!- ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

March 16, 2022
in இலங்கை, உள்ளுர்
இடமாற்றங்களை முறையாக மேற்கொள்ளாவிடில் முற்றுகை!- ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்த வேண்டி ஏற்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இடமாற்றம் தொடர்பாக தொழிற்சங்க சபையால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளாது, வடமாகாண கல்விப்பணிப்பாளர் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றார். அதனால் கல்வித்துறையில் மிக நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.

எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்த இடமாற்றங்கள் அதாவது வெளிமாவட்ட ஆசிரியர்களின் சேவையின் அடிப்படையில் இடமாற்றம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் கல்வி அமைச்சின் அலுவலகத்தையும், ஆளுநர் செயலகத்தையும் முடக்குவோம்.

அரசியல் செல்வாக்கு காரணமாக சில ஆசிரியர்கள் இந்த இடமாற்றத்துக்கு உள்வாங்கப்படவில்லை. அவர்களுக்கு வசதியான இடத்தில் நியமனங்களைப் பெற்று நீண்ட காலமாக உரிய இடமாற்றம் இல்லாமல் அதே பாடசாலையில் சேவை செய்து வருகின்றனர். இது தவறு. இடமாற்ற கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு கல்வி அமைச்சில் அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் நடந்துள்ள போதும், தற்போதைய ஆளுநரும் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்கிறார். இது ஆளுநரும் அரசியல் நிகழ்ச்சி நிரலிலேயே இயங்குகின்றாரா என்ற சந்கேகத்தை ஏற்படுத்துகின்றது என்றார்.

Tags: ஆசிரியர் சங்கம்இடமாற்றம்இலங்கைமுற்றுகை
Previous Post

பரசிட்டமோல் மாத்திரை விலை மீண்டும் அதிகரிப்பு!!

Next Post

வீட்டின் கதவு உடைத்து 25 பவுன் நகை திருட்டு!

Next Post
வீட்டின் கதவு உடைத்து 25 பவுன் நகை திருட்டு!

வீட்டின் கதவு உடைத்து 25 பவுன் நகை திருட்டு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.