இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டுத் தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்குத் தயராக இருந்த நிலையிலை, பாணந்துறைக் கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும், ஆறு குழுந்தைகளும் அடங்குகின்றனர் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் 6 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்ற பின்னர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Discussion about this post