பொலிஸார் பலப்பிரயோகம் மேற்கொண்டதில் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாய் ஒருவருக்கு, பொலிஸாரால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது பொலிஸார் பலப்பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
அதில் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.
அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் அந்தப் பெண் வழங்கிய வாக்குமூலங்களை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இந்த விடயத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
முறைப்பாட்டை விலக்கி சமாதானமாக செல்ல பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட ஆலோசனையை அந்தக் குடும்பத்தின் அங்கத்தவர்கள் ஏற்க மறுத்திருந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று படைத்தரப்பு மிரட்டல் விடுத்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.
Discussion about this post