Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோதத் திருவிழா!

January 7, 2024
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் வினோதத் திருவிழா!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியா- தமிழகம் மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நூறு ஆடுகள் வெட்டப்பட்டு 100 மூடை அரிசியில் சமையல் செய்து ஆண்கள் மட்டுமே உண்டு மகிழும் விநோத திருவிழா வருடாந்தம் இடம்பெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில், காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயிலிலேயே இந்த விநோத திருவிழா சனிக்கிழமை இடம்பெற்றது.

மார்கழி மாதமே இந்த திருவிழா நடைபெறும்.இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்கமுடியாது.

இந்த விழாவில், பலியிடப்படும் ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. வளரும் இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவை தேடி செல்லும் போது, யாரும் விரட்டமாட்டார்கள்.

நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 101 ஆடுகள் குறிப்பாக கருப்பு ஆடுகள் மட்டும் பலியிடப்பட்டு உணவாக சமைக்கப்பட்டன.

100 மூடை அரிசியில் சோறு தயாரான இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது.

இலை போட்டு சாதமும், ஆட்டுகறி குழம்பும் ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம். இந்த இலைகள் காய்ந்து, அந்தப் பகுதியில் இருந்து கலைந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவர்.

Tags: #Curry Party#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsindia
Previous Post

மீண்டும் அதிகரித்த சீமெந்தின் விலை

Next Post

கனேடிய பிரதமரின் விமானம் மீண்டும் பழுது

Next Post
கனேடிய பிரதமரின் விமானம் மீண்டும் பழுது

கனேடிய பிரதமரின் விமானம் மீண்டும் பழுது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.