தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கத் தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன அதிரடியாக தெரிவித்துள்ளது.
பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் அவர் குறிப்பிட்டார். இதன்போது பெரமுனவின் அனைத்து அமைச்சர்களும் நீக்கப்பட்டாலும் நீங்கள் காத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என அவரிடம் கேட்கப்பட்டது.
இல்லை, இல்லை எம்மால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். எம்மால் செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதுடன் பல விடயங்களைச் செய்ய முடியும் என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
Discussion about this post