ஆட்சியாளர்களால் உகண்டா, சீசல்ஸ் உட்பட சில நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்க வேண்டும். அதனை செய்யக்கூடிய வல்லமை, ஊழல், மோசடிகளுடன் தொடர்பற்ற எமக்கே இருக்கின்றது.
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம் என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை நேற்று (17) முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது.
ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும், பெருந்திரளான மக்களும் குறித்த பாதயாத்திரையில் பங்கேற்றிருந்தனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
Discussion about this post