இலங்கை கடற்படையினர் நேற்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்தனா் என்று சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர்.
கிழக்கு கடற்படை கடற்படையினர் இன்று காலை திருகோணமலைக்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.
சோதனையின் போது, கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கும் 64 பேரை கைது செய்ததுடன் மீன்பிடி இழுவை படகையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர்களில் 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் அடங்குகின்றனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.
Discussion about this post