அவுஸ்திரேலியா- விக்டோரியா நகரில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Goulburn பள்ள தாக்கில் Seymour மற்றும் Yea பகுதிகளில் வாழும் மக்களை உடன் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
” எச்சரிக்கையை கருத்திற்கொள்ளாமல் தங்குவதற்கு முற்பட்டால் அவசர சேவையினரால் உதவி முடியாத நிலை ஏற்படும்.” – என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Seymour பகுதியில் சுமார் 50 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளம், மரங்கள் சரிவு மற்றும் கட்டட சேதம் ஆகியன தொடர்பில் உதவி கோரி 920 அழைப்புகள் அவசர பிரிவுக்கு வந்துள்ளன.
Discussion about this post