அவுஸ்திரேலியாவில் மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அங்குள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களில், மூன்று இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அந்த கோயில்களில் சூறையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கோவில் சுவரில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
முதல் தாக்குதல், மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயனண் கோவிலில் நடந்தது. இதைத் தொடர்ந்து விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவில் மற்றும் மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோவிலிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இது குறித்து கான்பராவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பினர், வெளியில் இருந்து வந்த உத்தரவுகளின்படி இந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post