அவுஸ்திரேலியாவின் பழங்குடியினருக்கு அதிகளவான பிரதிநிதித்துவத்தினை வழங்குவதற்கான அம்சத்தினை அரசியலமைப்புச் சட்டத்தில் சோ்ப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு எதிர்வரும் ஒக்டோபா் மாதம் 14-ஆம் திகதி நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை அவுஸ்திரேலிய நாட்டின் பிரதமரான அன்டனி அல்பனீஸ் வெளியிட்டிருந்தார்.
ஐரோப்பியா்கள் குடியேறுவதற்கு முன்னரே அவுஸ்திரேலியாவில் பூா்வீகக் குடியினா் வாழ்ந்து வந்துள்ளனர், அவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசாங்கம் அவா்களுக்கு பிரதிநிதித்துவம் வளங்க தீர்மானித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு ‘பூா்வீக குடியினரின் குரல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக பூா்வீக குடியினரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்க நாடாளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொதுமக்களின் அபிப்பிராயத்தை தெரிந்துகொள்வதற்காகவே, எதிர்வரும் ஒக்டோபா் மாதம் 14-ஆம் திகதி பொதுவாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
பிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, குறித்த திட்டத்திற்கு ஆதரவானவா்களும், எதிரானவா்களும் அவர்களின் பிரசாரத்தைத் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post