இந்தியப் பிரதமராக மூன்றாவது தடவையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி(Narendra Modi)யின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe )சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அதிபர் ரணில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று மாலை பதவியேற்பு
இன்று (09) மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி பதவியேற்கிறார், அத்துடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு 3 முறை பிரதமராக பதவி வகிக்கிறார் மோடி.
இதில் ஆயிரக்கணக்கான அரசு தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மூன்று அடுக்கு பாதுகாப்பு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு(Droupadi Murmu) பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ராஷ்டிரபதி பவனில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்காக டெல்லி அதிக உஷார் நிலையில் இருப்பதால், டெல்லி காவல்துறையின் SWAT மற்றும் NSG இன் கொமாண்டோக்கள் முக்கிய இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
44 நாட்கள் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post