யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு அருகில் இன்று காலை 9.30 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெற்றது.
அத்தியாவசிய பொருட்கள் எங்கே, வலிகாமம் வடக்கு மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Discussion about this post