நாட்டின் நெருக்கடியை தீர்ப்பதற்கு நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நாட்டு மக்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
தற்போதைய அரசாங்கம் பதவி விலகத் தயராக இல்லை என்று தெரிவித்த அவர், அவர்கள் பதவி விலகும்வரை போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
Discussion about this post