சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர்
சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னர் புதிய
அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என அந்த வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது
அமைச்சரவைக்கு புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கும் பட்டியல் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் சில
மாதங்களுக்கு முன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர்கள்
நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்தது.
பட்ஜெட் நிறைவேற்றப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என வதந்திகள் பரவினாலும் அதுவும்
தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை தற்போது பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்டதுடன், அரசியலமைப்பின் படி மேலும் பன்னிரண்டு
அமைச்சர்களை நியமிக்க அதிபருக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி, பன்னிரெண்டு அமைச்சர்களின் புதிய நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடைபெற
வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.
Discussion about this post