நாட்டில் உள்ள பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் 90க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் மருத்துவ கலாநிதி ஹரித அலுத்தே, நாட்டில் உள்ள மருத்துவமனை வலையமைப்பு பற்றாக்குறை காரணமாக வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகர எல்லையில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் போன்ற மருத்துவமனைகள் கூட மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.
பெராசிட்டமோல், பிரிட்டோன், சேலைன் போன்ற அத்தியாவசிய மருந்துகளும் பற்றாக்குறை காணப்படுகிறது என்று தெரிவித்த அவர், எஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் கொழும்பு பொது மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாடு காரணமாக, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனை போன்ற ஆய்வகங்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post