யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் உள்ள கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அத்தியாவசிய சேவைகளில் ஈடுவோருக்கே பெற்றோல் விநியோகிக்கப்படும் என்றும், ஏனையோர் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர், பிரதேச செயலகம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் வகைக்கப்படுத்தப்பட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கே பெற்றோல் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகின்றது.
ஏனையோருக்கு இன்று பெற்றோல் விநியோகிக்கப்படாது என்றும், அதனால் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
Discussion about this post