ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே நேற்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞர், கடந்த நான்கு ஆண்டுகளாகப் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்துள்ளார். அவரை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்ப பெற்றோர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.
நேற்றுக் காலையில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு விட்டு வீட்டுக்கு வந்த இளைஞர் நெஞ்சைப் பொத்தியவாறு நிலத்தில் சரிந்து உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரின் உயிரிழப்பு அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டமையால் ஏற்பட்டது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டு வாரங்களில் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதனால் உயிரிழந்துள்ளனர். போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட தெல்லிப்பழை கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார்.
Discussion about this post