Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

அதிக பணிச்சுமையால் உயிரிழந்த இளம் யுவதி; வெளியான பகீர் தகவல்!

September 19, 2024
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
அதிக பணிச்சுமையால் உயிரிழந்த இளம் யுவதி; வெளியான பகீர் தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் ஐ.டி கம்பெனியில் அதிக பணிச்சுமையால் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டின் (26) என்ற இளம் பெண்ணே இவ்வாரு உயிரிழந்துள்ளார். கொரோனாவிற்கு பிறகு அதிகமான ஐ.டி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுவதை வழக்கமாக்கிவிட்டது.

அதேசம்யம அலுவலகத்தில் 8 மணி நேர வேலை என்றால் வீட்டில் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்யவேண்டிய சூழல் உள்ளதனால், பலரும் இரவு நீண்ட நேரம் வேலை செய்து வருகின்றனர்.

கண்ணீர் விடும் தாயார்கேரளாவைச் சேர்ந்த அன்னா செபாஸ்டின் (26) என்ற பெண் கடந்த மார்ச் மாதம் சி.ஏ படித்து முடித்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புனேயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் முதல் முறையாக வேலைக்குச் சேர்ந்தார்.

ஆனால் வேலையில் சேர்ந்த 4 மாதத்தில் அப்பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தனது மகள் பணி அழுத்தம் காரணமாகத்தான் இறந்தார் என்று அன்னாவின் தாயார் அனிதா குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக அன்னா செபாஸ்டின் வேலை செய்த நிறுவனத்திற்கு அன்னாவின் தாயார் அனிதா எழுதி இருக்கும் கடிதத்தில் தனது மகளின் மரணத்திற்கு கம்பெனி நிர்வாகம் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அதில் ,”அன்னாவின் மேலாளர் நாள் முடியும் நேரத்தில்தான் வேலை கொடுப்பார். இதனால் எனது மகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இரவு நேரத்தில், விடுமுறை நாள்களில் கூட வேலை கொடுப்பார்.

அதிகப்படியான வேலை இருப்பதாக அன்னா எங்களிடம் தெரிவித்தார். கூடுதல் வேலையை கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி கேட்பார். நான் இது போன்ற வேலைகளை எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று சொல்வேன்.ஆனால் அவரது மேலாளர் தொடர்ந்து வேலை கொடுத்துக்கொண்டே இருந்தார். அன்னாவிற்கு ஓய்வெடுக்கக்கூட நேரம் இல்லை. இரவு, விடுமுறை நாளில் கூட வேலை செய்து கொண்டிருப்பார். ஒரு முறை அவரது கம்பெனி உரிமையாளர் இரவில் வேலையை கொடுத்துவிட்டு காலைக்குள் முடிக்கும்படி கூறினார்.மற்றொரு முறை அன்னாவின் உதவிமேலாளர் இரவில் வேலையை கொடுத்துவிட்டு அடுத்த நாள் காலைக்குள் முடித்துக்கொடுக்கும்படி கூறினார். அன்னா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், இரவில் வேலை செய்யுங்கள், நாங்களும் இரவில் வேலை செய்கிறோம் என்று சொல்வார்கள்.

Previous Post

சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் மர்ம மரணம் ; அதிர்ச்சியில் உறவுகள்!

Next Post

500 ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் திடீர் சுகயீனம்; காரணம் என்ன?

Next Post
500 ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் திடீர் சுகயீனம்; காரணம் என்ன?

500 ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் திடீர் சுகயீனம்; காரணம் என்ன?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.