இலங்கையில், அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
தமிழர் தாயகப் பகுதியில் காணப்படும் அரச வெற்றிடங்களுக்கு பெரும்பான்மையினத்தவர் நியமிக்கப்படுதல் தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரசாங்க பிரதிநிதிகளுக்களையும் அதிபர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் ஊடாக, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்வாங்கப்படுவதால், பிறமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில், தேவையற்ற அரசியல் குழப்பங்களுக்கும் வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்காலத்தில், அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் அந்தந்த மாவட்டத்தினை சேர்ந்தவர்கள் மூலமே வெற்றிடங்களை நிரப்புவதற்கு முயற்சிக்க வேண்டும் என அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் போது, அண்மையில் யாழ் பல்கலைக் கழகத்திற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த ஏழு சிற்றூழியர்களை நியமிப்பதற்கான முன்னெடுப்புகள், இடைநிறுத்தப்பட்மை, கடற்றொழில் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை திருப்பி அழைப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கி வைக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.
Discussion about this post