பதவி வெற்றிடங்களுக்கு ஆள்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தற்போதும் மஹிந்த ராஜபக்ச வைத்திருப்பதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளார் என கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகியிருந்தாலும் சில அதிகாரங்களைத் தற்போதும் தன் வசம் வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் பலம் இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதை மீறிச் செயற்பட முடியாத நிலைமையில் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்களிலும், அரச கூட்டுத்தாபனங்களிலும் தன்னிச்சையான நியமனங்களை வழங்க முடியாத நிலைமையில் ஜனாதிபதி உள்ளார். பதவிகளை நியமிக்கும் அதிகாரத்தை மஹிந்த ராஜபக்ச வைத்திருப்பதால் அரசாங்கத்தில் உள்ளக நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி விரும்பியவகையில் பதவிகளிகளில் மாற்றங்களைச் செய்ய முடியாதவாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது என்றும், அதனால் ஜனாதிபதியின் நிர்வாகத் திட்டங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.
இந்த நிலைமை நீடித்தால் விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை ஜனாதிபதி அறிவிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Discussion about this post