கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு வரி அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தேனீர் , அப்பம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப் படாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வருடாந்த வருமானம் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பெறும் வர்த்தகர்களுக்கு சமூக பாதுகாப்பு வரி அறிவிடப்படுகிறது.
அதையடுத்து பெரிய இறக்குமதியாளர்கள் பொருள்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கும்போது வரியைச் சேர்த்துள்ளனர்.
Discussion about this post