எரிபொருள் கொள்முதலுக்காக கட்டணம் செலுத்திய கப்பல்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க எதிர்வரும் மாதத்துக்கான எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றதாக உள்ளது. சீனா, இந்தியாவிடமிருந்து சாதகமாக பதில் இதுவவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் மாத்திரமே ஏனைய நாடுகள் நம்பிக்கையுடன் ஒத்துழைப்பு வழங்கும். இந்தியா மாத்திரமே நெருக்கடியான சூழ்நிலையில் கடனுதவி திட்டத்தின் ஊடாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.
கைவசமுள்ள பாவிக்க கூடிய கையிருப்பு வரையறுக்கப்பட்டதாக உள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை எதிர்வரும் மாதத்தின் முதல் வாரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்க முடியும். இருப்பினும் அதற்கு பின்னர் எரிபொருள் கொள்வனவு நிச்சயமற்றதாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post