அடுத்தவாரம் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் அடுத்த வாரம் வரையில் பொறுத்திருக்க வேண்டும்.
அதேநேரம் பிரதி சபாநாயகர் தெரிவுக்காக தமது தரப்பிலும் ஒருவரை முன்னிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்- என்றார்.
Discussion about this post