இரகசிய வாக்கெடுப்பின்போது, வாக்குச்சீட்டை சபையில் காட்சிப்படுத்தியதால் எதிர்க்கட்சித் தலைவர் மீது, சபாநாயகர் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் கூடியபோது, பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெற்றது. அந்தப் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சபாபீடத்துக்கு முன்பாக வாக்கு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித் தலைவரின் பெயர் அழைக்கப்பட்டதும், அந்த இடத்துக்கு சஜித் சென்றார். வாக்குச்சீட்டில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அதைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், எதிரணி உறுப்பினர்களுக்கும் காண்பித்தார். அதைப் பார்த்த சபாநாயகர் கடுப்பானார்.
“இரகசியத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். பின்னர் இப்படிச் செயற்படலாமா?” என சபாநாயகர் அவரைக் கண்டித்தார்.
Discussion about this post