நீங்கள் வெற்றி பெறுவதற்காக நாம் எவ்வளவோ செய்தோம். ஆனால் இன்று எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இனி வாக்குக் கேட்டு வந்தால் தும்புத்தடிதான் தூக்குவோம்.
இவ்வாறு காலி மாவட்டம் ஹிக்கடுவ பிரதேச மக்கள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு பெற்றுக் கொள்வதற்காக மக்கள் காலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எரிவாயு சிலிண்டர்களுடன் வாகனம் வந்ததைத் தொடர்ந்து, வரிசையை சிலர் குழப்பினர். அவ்வாறு குழப்பியவர்களை பொலிஸார் பாதுகாத்தனர் எனக் குற்றம் சுமத்தி மக்கள், பொலிஸாருக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, நாம் எரிவாயுவுக்கும், மாவுக்கும், எரிபொருளுக்கு வரிசையில் நிற்கின்றோம். இவர்களுக்கு (ராஜபக்சாக்கள்) வாக்களித்ததால் கிடைத்த பரிசு போதும்.
மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு இப்படிச் செயற்படுகின்றார்கள். இது எமக்குப் போதாது. நீங்கள் வெற்றி பெறுவதற்காக நாம் என்னவெல்லாம் செய்தோம்? இன்று நீங்கள் எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
இப்போது நாம் துன்பப்படுகின்றோம். விவசாயம் செய்ய முடியாது தவிக்கின்றோம். வாக்குக்கேட்டு வந்தால் இடிதான் விழும். தும்புத்தடியைத்தான் தூக்குவோம்= என்று ஊடகங்களுக்கு பிரதேச மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
Discussion about this post