வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 210 தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதேவேளை வடக்கு மாகாண மருத்துவமனைகளிலிருந்து 210 தாதியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலிருந்து 75 தாதியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு காத்திருக்கின்றனர். அங்கு எத்தனை தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்ற விவரம் இன்னமும் வெளியாகவில்லை.
இதேவேளை இடமாற்றம் பெற்றுச் செல்லும் தாதியர்களின் எண்ணிக்கையளவு தாதியர்களே நியமிக்கப்படுவதால், வடக்கில் தொடர்ந்தும் தாதிய வெற்றிடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post