யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மாணவனாவார்.
கடந்த 18ஆம் திகதி காய்ச்சல் காரணமாக அவர் பனடோல் உட்கொண்டு விட்டு வீட்டில் இருந்துள்ளார். ஆயினும் 19ஆம் திகதி மீண்டும் வயிற்றோட்டம், வாந்தி என்பவற்றால் மாணவன் பாதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சிறுவன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
Discussion about this post