Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

நாய்குட்டியின் நகக்கீறல் குடும்பஸ்தர் உயிரை பறித்தது!!- யாழில் சம்பவம்!!

March 15, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
பிள்ளைகளுக்கு உணவில்லாததால் தற்கொலை செய்த தந்தை!! – இலங்கையில் சோகம்!!

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

0
SHARES
Share on FacebookShare on Twitter

3 மாதம் நிரம்பிய நாய்க் குட்டியின் நகக்கீறலைக் கவனிக்காமலிருந்தமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தம்பித்துரை வீதி பண்டத்தரிப்பைச் சேர்ந்த 48 வயதுடைய காருண்யசிவம் ஆனந்தராசா என்பவரே நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் வீட்டில் வளர்த்த 3 மாத நாய்க்குட்டி ஒன்று, ஆனந்தராசாவின் கையில் விறாண்டியுள்ளது.

இதன் பின்னர் 2 நாள்களில் நாய்க் குட்டி உயிரிழந்துள்ளது. நாய்க்குட்டியின் நகக்கீறலுக்கு ஆனந்தராசா மருத்துவ சிகிச்சை பெறவில்லை.

இந்த நிலையில் ஆனந்தராசாவுக்கு நேற்றுத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நீர்வெறுப்பு நோய்க்குரிய அறிகுறிகள் அவரில் தென்பட்டுள்ளன.

நேற்றுக் காலை சங்கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனேயே அவர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் நேற்று மதியம் அவர் உயிரிழந்துள்ளார்.

செல்லப்பிராணிகளால் சிறிய காயங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் மூலம் உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: FBTTஉயிரிழப்புகுடும்பஸ்தர்நாய்குட்டிபண்டத்தரிப்புயாழ்ப்பாணம்
Previous Post

கோட்டாவுக்கு ஆதரவாக இப்போதும் பரப்புரை!!

Next Post

ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை!! – சந்தேகநபர் கைது!!

Next Post
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை!! - சந்தேகநபர் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.