யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உதயபுரத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் என்ற 53 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றுத் திங்கட்கிழமை அவர் தனது மகனுடன் கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், கடலில் தவறி வீழ்ந்து காணாமல் போயிருந்தார்.
அவரை சக மீனவர்கள் தேடிவந்த நிலையில், அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post