ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்று சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டள்ளது.
தான் பிரதமராக பதவியேற்ற பின்னர், 5 பில்லியன் டொலர் கிடைக்கும் என ரணில் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கூறியிருந்தமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுவரை 5 பில்லியன் டொலர்களை மாத்திரமல்ல, டொலர் எதையும் நாட்டுக்கு கொண்டு வர பிரதமர் தவறியுள்ளார் என்று கூறியே பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.
அடுத்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பிரதமரிடம் இது தொடர்பாகக் கேள்விகளை எழுப்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post