புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றெட்பானா பகுதியில் வீடு உடைத்து திருடினர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் பட்டப்பகல் வீடு உடைத்துப் பணம், நகை திருடப்பட்டிருந்தது என்று பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்தது.
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்புப் பொலிஸார், தர்மபுரம் பொலிஸாரின் உதவியுடன் சந்தேகநபர்களை தர்மபுரம் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்தனர் என்று கூறப்படுகின்றது. சந்தேகநபர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டது.
தற்போது சந்தேகநபர்கள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post