நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், பிரதேச செயலரின் தலையீட்டால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது.
நல்லூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கான எரிவாயுவை நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊடாக பங்கிட்டு அட்டை அடிப்படையில் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அங்கு பெருமளவான மக்கள் வரிசைகளில் நின்று பதிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்த வேளை நல்லூர் பிரதேச செயலர் திடீரென வந்து விநியோக ஏற்பாடுகளை இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட நேரம் வரிசையில் நின்ற மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Discussion about this post