ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தின் மிதி பலகையில் பயணித்த நபர் ஒருவர் ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி பலத்த காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு புகையிரத நிலையங்களுக்கு இடையில் களுத்துறை அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நேற்று (25.08.2023) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தொடருந்து பெட்டிகளில் அதிகளவில் பயணிகள் இருந்தமையினால் மிதிபலகையில் வெளியில் தொங்கியபடி சென்ற போது ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி சுமார் 30 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து காயமடைந்த நபர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post