தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்குச் சென்ற 16 பேரில், 10 பேரை மண்டபம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்குமாறு ராமேஸ்வரம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தலைமன்னாரில் இருந்து இரு குடும்பங்களைச் 16 பேர் நேற்றுமுன்தினம் படகுமூலம் தமிழகம் சென்றிருந்தனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே அவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர் என்று விசாரணைகளில் தெரிவித்திருந்தனர்.
நேற்றுமுன்தினம் அதிகாலை ஒரு படகில் சென்ற 6 பேர் மண்டபம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு மேலும் 10 பேர் படகு மூலம் தமிழகம் சென்றிருந்தனர். அவர்கள் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களையும் அகதிகள் முகாமுக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Discussion about this post