பேசாலை ஊடாக மேற்கொள்ளப்படும் சமூக விரோதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்குத்தள கேட்போர் கூடத்தில் பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகள் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது.
தற்போது பேசாலையூடாக நாட்டை விட்டுச் செல்வோர் அதிகரித்துள்ள நிலையிலும், பேசாலை ஊடாக போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்படும் நிலையிலும், அவற்றைத் தடுக்கும் நோக்குடன் கடற்படையினர் பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகள் ஊடாக இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.
பேசலை ஊடாக மேற்கொள்ளப்படும் சமூக விரோதச் செயங்பாடுகளை தடுத்த நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விடயத்தில் மீனவர்கள் கடற்படையினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பாக மீனவர்கள் மற்றும் அரசு அரசு சார்பற்ற பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தபோது, பேசாலை கடற்கரையோரத்தில் மின் அனல் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளதால் இந்தப் பகுதியில் மீன்பிடி குறைந்துள்ளது. இந்திய இழுவைப் படகுகளாலுமு் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை ஈடு செய்ய முடியாது தவிப்போர், குறுக்கு வழியில் சம்பாதிக்க முயல்கின்றனர். இதுவே சமூக விரோத நடவடிக்கைகளுக்கு முக்கியமான காரணமாக அமைகின்றது.
சமூக விரோதச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவை தொடர்பாக தகவல் வழங்கிய சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்தத் தகவல் பகிரப்படுகின்றது. அதனால் பலர் தகவல் வழங்க அச்சப்படுகின்றனர் என்றனர்.
இந்தக் கலந்துரையாடலில் தலைமன்னார் கடற்படை முகாம் தளபதி குமார, மன்னார் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரி எஸ்.பவானி பேசாலை மீனவ சமூக பிரதிநிதிகள் அரசு அரசு சார்பற்ற பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Discussion about this post