கிளிநொச்சி மாவட்டத்தில், கிளாலிப் பகுதியில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் 16 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது.
கிளாலி பாடசாலைக்கு அருகே உள்ள காணி ஒன்றைத் தாயுடன் இணைந்து துப்புரவு செய்தபோதே சிறுமி வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியுள்ளார்.
படுகாயமடைந்த சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post