காட்டுக்குள் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் நிர்வாகத்தை திறம்பட நடத்தினார்கள். ஆனால் நாட்டுக்கு இருந்து கொண்டு நாட்டை நடத்தத் தெரியாதுள்ளனர் ராஜபக்சக்கள்.
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தருமலிங்கம் கெங்காதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆட்சியாளர்களின் நிர்வாகத்தை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
69 லட்சம் பேரின் தூர நோக்கற்ற தெரிவின் காரணமாக, இன்று முழுநாட்டு மக்களும் பெரியதொரு இன்னல் நிலைமைக்குள் சிக்கியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மிக விரைவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்து மக்களை இந்தக் கொடூரமான பிடியில் இருந்து மீட்போம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டின் ஒரு தனிக் கட்சியால் ஆட்சியமைக்க முடியாது. ஆட்சி மாற்றத்துக்கான நேரம் வரவிருக்கின்றது. நாட்டிலுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
Discussion about this post