கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழாவுக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து தலா நூறு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சதீவு உற்சவம் நடைபெறவுள்ளது. அதில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து தலா 50 பேரைக் கலந்துகொள்ள அனுமதிப்பது என்று முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
நேற்று வியாழக்கிழமை கிடைத்த அறிவுறுத்தலின்படி, இரு நாடுகளில் இருந்தும் தலா 100 பேரை திருவிழாவுக்கு அனுமதிக்க முடியும் எனவும்தெரிவித்தார்.
Discussion about this post