உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் யாரென்பது தற்போது அம்பலமாகிவருகின்றது.. சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்கமுடியும். ஆனால் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி நேற்று இடம்பெற்ற ‘நீதிகோரிய’ பேரணியில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு, தேர்தலின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை முழுமையாக பயன்படுத்தியது. எனவே, இதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்கலாம் என அன்று நாம் ஊகித்தோம். தற்போது அது அம்பலமாகிவருகின்றது.
சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது. நாட்டை நிர்வகிக்கவும் தெரியவில்லை.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பெரும்பாலான பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை. முஸ்லிம்மக்கள்மீது பழிபோட்டுவிட்டு, இதன் பின்னணியில் செயற்பட்டவர்களை பாதுகாக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமைக்கு அந்த சாபமும் காரணம் என்றும் போராயர் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post