இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்துக்குத் தப்பிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம், காக்கைதீவில் இருந்து 15 பேர் இன்று அதிகாலை தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர். 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரே தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை தமிழகத்தின், தனுஷ்கோடியை அடைந்துள்ளனர் என்று தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்த பின்னர் இதுவரை 75 பேர் தஞ்சம் கோரித் தமிழகத்துக்கு படகுகள் மூலம் தப்பிச் சென்றுள்ளனர். ஏற்கனவே தஞ்சம் கோரிச் சென்ற 60 பேர் தமிழகத்தில் உள்ள மண்டபம் அகதிமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post