இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயன்ற 91 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம், மாரவில பிரதேசத்திலும், மேற்குக் கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகயில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.
மாரவில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஒரு சிறுவன் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான நீண்டநாள் மீன்பிடிப் படகொன்றைச் சோதனையிட்டபோது 5 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறைகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Discussion about this post