அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்புப் பேரணி இன்று மூன்றாவது நாளாக கலிகமுவவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று 19 கிலோமீற்றர் நடைப்பயணத்தின் பின்னர் தன்னோவிட்டவை சென்றடையவுள்ளது.
நாளை தன்னோவிட்டவில் இருந்து யக்கல வரையில் ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ந்து 30ஆம் திகதி பேலியகொடவுக்கு வரவுள்ளது.
அதைத் தொடர்ந்து பேலியகொடையில் இருந்து மே தின ஊர்வலம் இடம்பெற்று பேரணியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை சென்றடையவுள்ளது.
கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர் என்றும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் சாதகமான எதையும் சாதிக்கத் தவறியுள்ள நிலையில், தற்போதைய நெருக்கடியை நாட்டுக்குச் சமாளிப்பதற்கு உதவுவதற்காக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post