எரிபொருளை அதிக விலைக்கு விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 245 லீற்றர் டீசல், 478 லீற்றர் பெற்றோல் மற்றும் 80 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 340 லீற்றர் டீசலுடன் விசுவமடுப் பகுதியிலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
அதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தவிர்ந்து ஏனைய இடங்களில் எரிபொருள் விற்பனை செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post