2024 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது.
நேற்றைய(03) போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 77 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
குசல் மென்டிஸ் 19 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 16 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றறனர்.
4 வீரர்கள் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.
வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி, 16.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
Discussion about this post