தேசிய எரிபொருள் உரிமம் தொடர்பான QR முறைமை தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
QR முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தரவுகளை ஆய்வு செய்து படிப்படியாக எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சு மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து தற்போதைய முறைமை தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post