ரஷ்யாவை சேர்ந்த Cybersecurity நிறுவனமான Kaspersky-இன் மென்பொருள்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
Kaspersky தனது antivirus உள்ளிட்ட மென்பொருட்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு Update வழங்கவோ கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்ய நிறுவனமான Kaspersky அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மென்பொருள் துறையில் பிரபலமாக அறியப்படும் Kaspersky நிறுவனம் ரஷியாவின் மாஸ்கோவை (Moscow) தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் உலகம் முழுவதும் 31 நாடுகளில் செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தீர்மானமானது தற்போதைய புவிசார் அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக Kaspersky நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதை தமது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post