ISIS பயங்கரவாத அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான இலங்கையர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மன் புஷ்பராஜை 72 மணித்தியாலங்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது தெமட்டகொடையை சேர்ந்த 46 வயதான ஒஸ்மன் புஷ்பராஜ் நேற்று (31) கைது செய்யப்பட்டார்.
இவர் இலங்கையில் இருந்துகொண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரையும் வழிநடத்தியிருக்கலாமென பாதுகாப்பு தரப்பினரால் சந்தேகிக்கப்படுகின்றது.
ஒஸ்மன் புஷ்பராஜின் இரு இளைய சகோதரர்களும் பங்கதெனிய பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ISIS பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் நால்வர் கடந்த 20 ஆம் திகதி, இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஒஸ்மன் புஷ்பராஜை கைது செய்வதற்காக பொலிஸாரினால் அண்மையில் பொதுமக்கள் ஒத்துழைப்பை கோரியிருந்ததுடன், அவர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 20 இலட்சம் ரூபா சன்மானமும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Discussion about this post